சாட்சி
59-04-11B

1. இம்மாதிரியான ஆராதனையைக் குறித்து ஏதோ ஓன்றுள்ளது, இது சற்றே வித்தியாசமாக இருப்பதாகத் தோன்றுகிறது. உங்கள் ஆத்துமாவை தேவனுடைய பிரசன்னத்தினாலே ஆசீர்வதிக்கும்படி செய்கிற எளிமை இதில் உள்ளது. இதுவே எனக்கு செய்கையில் உண்மையான கிறிஸ்தவமாய் உள்ளது.
ஒவ்வொரு காலையிலும், 10 மணிக்கு, ஏஞ்சலஸ் டெம்பிளில், சகோ.டுபிளஸ்ஸிஸ் (Brother.DuPlessis) பேசுகிறார் என்று நம்புகிறேன். சகோ.டுபிளஸ்ஸிஸ் அவர்களே, அது சரி தானே-? அவர் ஒரு - அவர் உண்மையிலேயே, நான் எப்பொழுதாவது சந்தித்த மனிதர்களிலேயே என்னுடைய ஊழியத்தைப் புரிந்து வைத்திருக்கிற சில மனிதர்களில் ஒருவர் ஆவார். நீங்கள் வருவீர்களானால், சகோ.டுபிளஸ்ஸிஸ் பேசுவதைக் கேட்பதன் மூலம் உங்களுடைய ஆத்துமா ஆசீர்வதிக்கப்படும் என்பதில் நான் நிச்சயம் உடையவனாய் இருக்கிறேன்.
என்னுடைய ஜீவியத்திலேயே நான் முதல் முறையாக அவருடைய மனைவியை சந்திக்கும்படியான சிலாக்கியத்தை சற்று முன்பு தான் கொண்டிருந்தேன். அவர்கள் அவ்வளவு - அவர்கள் அப்படியே ஒரு ஆப்பிரிக்க மொழியைப் பேசும் பெண்மணி மாதிரி இருக்கிறார்கள். அவர்கள் டெக்ஸாஸிலிருந்து வந்ததாகக் கூறினார்கள்... கலிபோர்னியாவில் இருக்கும் நீங்கள் எல்லாரும் என்னை நேசிக்கிறீர்களா-? அடுத்த படியாக, இப்பொழுது ஒன்றியத்திலுள்ள மாநிலங்களில் இரண்டாவது பெரிதாக இருப்பது டெக்ஸாஸ் தான் என்பதை நீங்கள் அறிவீர்களா-? முதலாவது பெரிய மாநிலம் அலாஸ்கா என்பது உங்களுக்குத் தெரியும். (சகோ.பிரன்ஹாம் நகைக்கிறார் - ஆசிரியர்.) ஓ, என்னே, அது டெக்ஸாஸைக் குறித்து நினைக்க வைக்கிறது, இல்லையா-? நல்லது, என்னுடைய தாயார் டெக்ஸாஸை சேர்ந்தவர்கள், நானே டெக்ஸாஸைக் குறித்து தற்பெருமையாகப் பேச சில காரியங்கள் எனக்கு உண்டு. அநேக மகத்தான ஆத்துமாக்கள் டெக்ஸாஸில் இருந்து வந்து உள்ளன. நாம் பரலோகத்துக்குப் போகும் போது, அவர்கள் அங்கு நல்ல முறையில் பிரதிநிதிகளாக இருப்பார்கள் என்ற நிச்சயம் உடையவனாய் இருக்கிறேன்: மகத்தான எழுப்புதல்களும் மற்றவைகளும்.
2. இப்பொழுது, இன்றைக்கு, தேவனுடைய ஆவியினால் நிரம்பி உள்ள இந்த அறையில், எதுவும் நடக்கலாம் என்று என்னால் அப்படியே எதிர்பார்க்க முடிகிறது. ஜனங்கள் ஒருமனப்பட்டுகூடி வரும் போது, அப்போது தான் காரியங்கள் நடக்கின்றன.
என்னோடு வேட்டையாடிக் கொண்டிருந்து, இங்கே திரும்பி வந்துள்ள என் நண்பரே, இக்காலையைக் கொண்டு இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சில நேரங்களில் அவருடைய பெயரை என்னால் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. வான் ரூட்டனில் இருந்து வந்து உள்ள சகோ.ஜானி: அவர், பர்ட் வான் ரூட்டனைச் சேர்ந்தவர். எனவே, அவர்... கிறிஸ்தவ வியாபார புருஷர்களின் பேரில் எனக்கு உள்ள மரியாதையின் நிமித்தமாக, நாங்கள் ஒன்றாக மேலே, திரும்பி வராத நதியோரம் (River of No Return) வேட்டையாடிக் கொண்டு இருந்தோம். நாங்கள் நிச்சயமாகவே ஒருமிக்க நல்ல ஐக்கியத்தை அதிகமாகக் கொண்டு இருந்தோம்.
3. மேலும் இப்பொழுது, உங்களுடன் பேசும்படியாக ஒரு பாடத்தை நடத்துவதற்கு உண்மையாகவே நமக்கு நேரமில்லை என்று எண்ணுகிறேன், ஆனால் நான் வெறுமனே இந்த சிறு சாட்சியைக் கூறி விட்டு கடந்து செல்ல விரும்புகிறேன். ...நினைக்கும் போது. இப்பொழுது, சகோ.டுபிளஸ்ஸிஸ் அவர்கள் தாம் அவமதிப்பாக இங்கிருந்து கடந்து செல்லவில்லை என்பதை சபையோரிடம் நான் கூறும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார், ஆனால் அவருக்கு சரியாக இப்பொழுதே ஒரு ஆராதனை இருக்கிறது, அவர் போயாக வேண்டியதாய் இருந்தது, எனவே... அவர் இக்காலையில் அங்கே ஏஞ்சலஸ் டெம்பிளில் பேசிக் கொண்டு இருக்கிறார் (பேசிக் கொண்டிருந்தார்). இன்றிரவு, டெம்பிளில் அவருடைய ஆவியின் வேறொரு மகத்தான ஊற்றப்படுதலை நாம் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம். கடந்த இரவில், நாம் டெம்பிளில் வழக்கத்திற்கு மாறான ஒரு இரவைக் கொண்டு இருந்தோம்.
இப்பொழுது, நான் அதன் வழியாக கடந்து வருகையில், அந்த டெம்பிளுக்கு வரும் பழங்காலத்தவரில் சிலர் அங்கே வெளியே அந்த சிறு நடைபாதையில் நின்று, அப்படியே அழுது கொண்டு, ‘இது பழங்காலங்களைப் போன்று காணப்படுகிறது’ என்று கூறிக் கொண்டு இருந்தனர். நான், ‘பெரிய ஒலிப்பெருக்கி’ என்று அழைக்கும் ஒரு மனிதன், அவர் ஒருக்கால் இங்கு இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் ஒரு விதத்தில் அங்கே ஒரு மெய்க்காவலராகவோ அல்லது ஏதோ ஒன்றாக இருக்கிறார். அவர் சற்று முன்பு தான் தமக்கு தாமே ஒரு யூபிலியைக் கொண்டு இருந்தார்.
4. இப்பொழுது, நான் கடந்த இரவில் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல்கள் என்பதன் பேரில், தேவன் எவ்வாறு வழி நடத்துகிறார் என்பதைக் குறித்துப் பேசிக் கொண்டு இருந்தேன். இந்த எல்லா காரியங்களுமே தேவனிடம் இருந்து தான் வருகின்றன என்பதை நாம் சற்று நம்முடைய சிந்தைகளில் வைத்து அதை மறவாமல் இருக்கக் கூடுமானால்.
சுமார் ஒரு வாரத்துக்கு முன்பு, ஏறக்குறைய 14 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தைக் குறித்த ஒரு கடிதம் எனக்குக் கிடைத்தது, அது, ‘இந்த சுகம் அளித்தல்கள் மனரீதியான சுகமளித்தல்களா அல்லது அவைகள் சரீர சம்பந்தமான சுகமளித்தல்களா-?’ என்ற கேள்வியைக் கேட்க விரும்பின - அவ்விதமான ஒரு அபிப்ராயத்தைக் கொண்டிருந்த ஒரு கடிதமாய் இருந்தது. நான் இக்காலையில் சற்று அதை வெளிப்படையாகக் கூறலாமே என்று எண்ணினேன், என்னுடைய ஊழியத்தின் ஆரம்பத்தில் ஏறக்குறைய 14 வருடங்களுக்கு முன்பு, ஆர்கன்ஸாஸில் உள்ள ஜோன்ஸ்போரோவில் ஒரு கறுப்பின பெண்ணுக்கு என்ன சம்பவித்தது என்றும் என்ன நடந்தது என்றும் கூறலாமே என்று எண்ணினேன்.
5. நாங்கள்... அப்போது ஊழியக்களத்தில் என்னைத் தவிர வேறு யாரும் இல்லை. சகோ.ராபர்ட்ஸ்-ம் அவர்களும், சகோ.கோவும் (Brother Coe), இன்று ஊழியக்களத்தில் இருக்கிற மகத்தான ஊழியக்காரர்களில் அநேகர் இன்னும் ஊழியக்களத்தில் வந்து இருக்கவில்லை. நான் அங்கே எட்டு நாட்களாக சரியாக மேடையிலேயே இருந்து கொண்டு இருந்தேன், நான் மேடையை விட்டுப் போகவே இல்லை: அப்படியே இரவும் பகலும் அங்கேயே தங்கி இருந்தேன். பிரசங்க பீடத்தின் பக்கத்திலேயே ஒரு குட்டித் தூக்கம் போடுவேன், அவர்கள் எனக்கு கொஞ்சம் ஆரஞ்சு ஜீஸ் தருவார்கள்; யாவருக்கும் ஜெபிக்கும் வரை நான் அங்கேயே தங்கி இருக்க வேண்டும் என்று தீர்மானித்து இருந்தேன். ஆனால் அங்கே... எட்டு நாட்களின் முடிவிலும், அங்கே துவக்கத்தில் இருந்ததைக் காட்டிலும் ஆயிரக்கணக்கானவர்கள் அல்லது அதற்கும் அதிகமானவர்கள் அங்கே இருந்தனர்.
இப்படியிருக்க, சீருடை அணிந்திருந்த யாரோ ஒருவர் என்னைப் பார்த்து சைகை காட்டினது எனக்கு நினைவிருக்கிறது. அது ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுனராக இருந்தது. அவர், ‘இங்கே மரித்துக் கொண்டிருக்கிற ஒரு நோயாளி என்னிடம் இருக்கிறாள். நீர் அவளிடம் வர முடியுமா-?’ என்று கேட்டார்.
6. முந்தின இரவு தான் ஒரு மனிதன் அங்கே இருந்தான், அவன் ஒரு செருப்பு தைப்பவன், அவன் ஆர்கன்ஸாஸில் உள்ள வேறொரு பட்டணத்தைச் சேர்ந்தவன், அவன் ஏறக்குறைய 20 வருடங்களாக குருடனாய் இருந்தான். அவன் வரிசையின் ஊடாகக் கடந்து சென்ற போது, பரிசுத்த ஆவியானவர் அவனுடைய நிலையைக் குறித்து அவனிடம் கூறி, அவன் சுகமடைந்தான் என்பதை அவனுக்கு கூறினார். நல்லது, அவன் கட்டிடத்தை விட்டுக் கடந்து சென்ற போது, அவனால் கட்டிடத்திற்குள் வரும் போது காண முடிந்ததைக் காட்டிலும் எதுவும் அதிகமாக அவனால் காண முடியவில்லை. ஆனால் எனக்கு அவனைத் தெரியாது என்றும், அதை உரைப்பதற்கு ஏதோவொரு வகையான இயற்கைக்கு மேம்பட்ட ஜீவன் அங்கே இருந்திருக்க வேண்டும் என்றும் அவன் அறிந்திருந்தான்; ஏனென்றால் அவனைக் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது என்பதை அவன் அறிந்திருந்தான். அதைப் பேசிக் கொண்டிருந்தவர் நானல்ல என்றும், அது அந்த நபர் தான் என்றும் அவன் ஏற்றுக் கொண்டான்.
சம்பவம் என்னவெனில், அந்த இரவில் அவன் வீட்டுக்கு போகும் தன் பாதையில் இருக்கும் போது, ஏறக்குறைய காலை இரண்டு மணிக்கு, அவனுக்கு முன்பாக காரின் வெளிச்சங்கள் மின்னுவதைக் (flickering) காணத் துவங்கினான், அடுத்த நாள் காலையில் அவர்கள் அதை வானொலியில் தேசம் முழுவதும் ஒலிபரப்பினார்கள். அடுத்த நாள் காலையில், அவன் தன்னுடைய சொந்த சபையை நோக்கி ஓடினான், அது மெதோடிஸ்டு சபையாகும், அங்கே அவர்கள்... அவன் அந்த சபையை விட்டு வெளியே தள்ளப்படும் வரையில், அதிக குழப்பம் ஏற்பட அவன் காரணமானான். அதன் பிறகு வீதியில் இருக்கும் ஒரு சபைக்கு அவன் சென்றான், அதன் பிறகு சாட்சி கூறும்படி வேறொரு சபைக்கு அவன் சென்றான். அது ஒரு குழப்பத்திற்குக் காரணமாகியது.
7. ஜனங்களில் அநேகர் மருத்துவமனைகளிலிருந்து வந்து இருந்தனர், அவர்கள் ஜெபிப்பதற்காக வாஞ்சித்தனர். நாங்கள் வெளியே கடந்து போகையில், நான் ஆம்புலன்ஸின் அருகில் செல்வதற்காக சில மனிதர்கள் எனக்கு உதவி செய்தனர், அங்கே ஆர்கன்ஸாஸை சேர்ந்த பெண்மணி போல ஒரு தாயார் படுத்து இருந்தார்கள், அவர்கள் புற்று நோயினால் மரித்துக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் மரித்து விட்டார்கள் என்று அவர்களுடைய கணவன் எண்ணினான், வெளிப்படையாகக் கூறினால், அவர்கள் அப்படியே ஒரு - ஒரு கோமா நிலைக்குள் போய் விட்டார்கள். அவர்கள் பேச்சின்றி அமைதியாக படுத்த படுக்கையாய் இருந்தார்கள், அவர்களுடைய கணவன் அந்த ஆம்புலன்சின் பின் பகுதியில் முழங்கால் படியிட்டிருந்தார், அங்கு தான் ஓட்டுநர் என்னை அழைத்துச் சென்றார். அவர், ‘சகோ.பிரன்ஹாமே, நீங்கள் அவளுக்காக ஜெபிக்கும்படி அவள் மிகவுமாக ஏங்கினாள், அவள் ஒரு நல்ல பெண். வாடகை செலுத்த அவள் உதவி செய்தாள்... இங்கே உள்ள இந்தப் வயதான அறிவில்லாத மூடனிடத்தில் (மூடர்களிடத்தில்) துன்புறுத்தும் காரியம் இருந்தது, அவளோ நான் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி நான் இருக்கச் செய்தாள். அவள் ஐந்து பிள்ளைகளுக்குத் தாய். நான் என்னுடைய பண்ணையை விற்று, அவளை மருத்துவமனையில் அனுமதித்தேன், நாங்கள் விற்ற கடைசி காரியம் என்னவெனில், எங்களுடைய பண்ணையில் இருந்த மிருகங்களைத்தான். மருத்துவர்கள் உண்மையுடன் அவளுடைய உயிரைக் காப்பாற்ற போராடினர், ஆனால் அவள் கைவிடப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டாள். எங்களை அழைத்து வரும்படியாக இந்த ஆம்புலன்சை ஆயத்தம் பண்ண, தேவைப்பட்ட பணத்திற்காக, நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு புட்டியில் அடைத்து வைத்த அவளுடைய ப்ளாக்பெர்ரி பழங்களை அவள் விற்று விட்டாள். இப்பொழுதோ அவள் பேச்சின்றி அமைதியாக படுத்திருக்கிறாள்; அவள் மரித்து விட்டாள்,’ என்றார்.
8. நான் அவர்களுடைய கரத்தைப் பிடித்தேன், அவர் தன்னுடைய பழைய ஒட்டுப் போடப்பட்ட வெளிறிப் போன சட்டையில் முழங்கால் படியிட்டார்... நான் அப்படியே ஒரு சிறு ஜெபம் ஏறெடுத்த போது, அவர்களுடைய நெற்றியில் இருந்த சுருக்கங்கள் இயல்பாக அசைவதைக் (frown) காண்பதாக நினைத்தேன். சாத்தான் என்னைப் பார்த்து, ‘நிச்சயமாக, அது வெறுமனே தசைகளின் மாற்றம் தான் என்பது உனக்குத் தெரியும். அவள் மரித்துப் போய் விட்டாள்’ என்றான். ஆனால் நான் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கையில், அவர்களுடைய கரம் இவ்விதமாக என்னை இறுகப் பற்றிப் பிடித்தது. சாத்தான் மீண்டும், ‘அது வெறுமனே தசைகள் தான்,’ என்றான். ஆனால் நான் அப்படியே தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தேன்.
சிறிது நேரத்தில் அவர்கள் எழுந்து, ‘நீங்கள் யார்-?’ என்று கேட்டார்கள். அவர்கள் உடைய வயதான புருஷன், தம்முடைய இனிய மனைவிக்கு மீண்டும் ஜீவனைக் கொண்டு வந்ததன் மூலமாக மிகுதியாக ஜெயங்கொண்டு விட்டார். அவர் தம்முடைய கரங்களை அவர்களைச் சுற்றிலும் போட்டுக் கொண்டு, ‘அம்மா,’ என்று கதறிச் சத்தமிடத் துவங்கினார்.
நான் ஆம்புலன்சின் கதவு வழியாக வெளியே நழுவிச் சென்று, ‘என்னை மீண்டும் மேடைக்கு அழைத்துச் செல்ல உன்னால் முடியுமா-?’ என்று கேட்டேன்.
அந்த மனிதன், ‘இதற்கும் கதவுக்கும் இடையில் அங்கே 2000 ஜனங்கள் இருக்கிறார்கள். நான் உம்மை நின்று கொண்டிருக்கும் அந்தப் பெருங்கூட்டம் ஜனங்களின் பின்னால் சுற்றி அழைத்துக் கொண்டு போய், உள்ளே செல்ல, என்னால் வழியை உண்டாக்க முடிகிறதா என்று பார்க்கிறேன்,’ என்றான்.
9. நீதியின் பேரில் பசி தாகம் உள்ளவர்களை தேவன் கனம் பண்ணுவார் என்பதை அது காண்பிக்கிறது, வரிசையாக வாடகை பேருந்துகள் நின்று கொண்டிருந்த அந்த இடத்தை நாங்கள் அடைந்த போது, நான் ஒரு சத்தத்தைக் கேட்டேன். நான் நோக்கிப் பார்த்த போது, அது ஒரு வாலிப கறுப்பின பெண்ணாக இருந்தது, அவள் நன்றாக உடுத்தி இருந்தாள். அந்நாட்களில், ஆர்கன்ஸாஸில் கடுமையான இனப் பிரிவினை இருந்தது. அவள் குருடாய் இருந்தாள், அவள் சுற்றியுள்ள தனது பாதையைக் கண்டு பிடிக்கும்படி முயற்சித்து, தன்னுடைய அப்பாவைக் கூப்பிட்டுக் கொண்டு இருந்தாள். நான் அவளைக் கவனித்தேன், ஏனெனில் அவள் இயல்பாகவே உயரமானவளாக இருந்தாள், அவள், ‘ஓ, அப்பா, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்-?’ என்று கூறிக் கொண்டிருந்தாள். அவளுடைய கரங்களைக் கொண்டு தடவிப் பார்த்து, ‘என்னுடைய அப்பாவை கண்டு பிடிக்க யாராவது எனக்கு உதவி செய்ய மாட்டீர்களா-?’ என்று கூறிக் கொண்டிருந்தாள்.
நல்லது, நான் அசையாமல் நின்றேன். யாருக்குமே என்னைத் தெரியவில்லை, ஏனெனில் நான் அப்படியே அந்த ஆலயத்திலேயே எல்லா நேரமும் இருந்து கொண்டு இருந்தேன், அவர்களால் அந்த இடத்திற்கு அருகில் போகவே முடியவில்லை. எனவே நான் அப்படியே சிறிது நேரம் அங்கேயே நின்று, அவளை நோக்கிப் பார்த்தேன். அவள், ‘யாராவது தயவு செய்து என்னுடைய அப்பாவைக் கண்டு பிடிக்க உதவி செய்யுங்கள்,’ என்றாள். யாருமே அவள் பேரில் எந்த கவனமும் செலுத்துவதாக தோன்றவில்லை. நான் அசையாமல் நின்று கொண்டு இருந்து, அவளையே கவனித்துக் கொண்டிருந்தேன். அவள் கும்பலாக இருந்த அந்தக் கூட்டத்தின் ஊடாக நகர்ந்து வந்து கொண்டு இருந்தாள்.
10. ஆலயத்தில் குருடாயிருந்த வயதான அன்னாளைக் குறித்து எனக்கு நினைவுக்கு வந்தது. அவள் நீண்ட காலமாக ஜெபித்து, இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருந்த நேரத்தை நினைவு கூர்ந்தேன், அவர்கள் நம்முடைய கர்த்தருக்கு நியாயப்பிரமாண முறைமையின்படி செய்வதற்காக அவரை ஆலயத்திற்குள் கொண்டு வந்த போது, பரிசுத்த ஆவியானவர் அன்னாளை அவள் குருடாயிருந்த நிலையிலும், அந்தக் கூட்டத்தினூடாக அவர் இருந்த இடத்திற்கு வழி நடத்தினார். நான் அதை நினைவு கூர்ந்தேன். நான் அசையாமல் நின்று கொண்டிருந்தேன். அந்த வாலிபப் பெண் நகர்ந்து வந்து கொண்டு இருந்தாள், இறுதியாக அவள் தட்டுத் தடுமாறி நடந்து நேராக என்னருகில் வந்தாள். அவள், ‘என்னை மன்னியுங்கள்’ என்றாள். அவள் மீண்டும் நகர்ந்து போகத் தொடங்கினாள். நான், ‘வாலிப பெண்ணே, நீ யாரைத் தேடுகிறாய்-?’ என்று கேட்டேன்.
அவள், ‘ஐயா, நான் என்னுடைய அப்பாவைத் தேடிக் கொண்டு இருக்கிறேன். நான்... நாங்கள் அந்த சுகமளிப்பவரைக் காணும்படியாக மெம்பிஸிலிருந்து இங்கே வந்தோம்,’ என்றாள். மேலும் அவள் தொடர்ந்து, ‘என்னை உள்ளே அழைத்து வரும்படியாக ஒரு வழியைக் கண்டு பிடிக்க என்னுடைய அப்பா முயன்று கொண்டு இருந்தார், நான் அசையாமல் நின்று கொண்டிருக்கும்படி அவர் என்னிடம் கூறினார்; ஆனால் அவர்களோ அந்த இடத்தை விட்டு என்னை வெளியே தள்ளி விட்டனர், நான் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து நான் வழி தவறி விட்டேன்; நான் குருடியாய் இருக்கிறேன், என்னால் மீண்டும் என்னுடைய வழியைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை. ஆகையினால் என்னுடைய அப்பா என்னைக் கண்டு பிடிக்கக் கூடிய இடத்தில் இருக்கும் பேருந்திற்கு போக எனக்கு உதவி செய்யும்படி நீர் தயவு காட்டுவீரா-?’ என்று கூறினாள்.
11. இப்பொழுது, இது ஒரு மாய்மாலமாய் இருப்பதைப் போன்று தோன்றலாம், ஆனால் நான், ‘நீ இங்கே யாரைப் பார்க்க வந்திருப்பதாகக் கூறினாய்-?’ என்று கேட்டேன்.
அவள், ‘நான் அந்த சுகமளிப்பவரைக் காணும்படி வந்திருக்கிறேன். பாரும், ஐயா, நான் வருடக்கணக்காக குருடாயிருந்து வருகிறேன். தன்னுடைய பார்வையைப் பெற்ற ஒரு மனிதனைக் குறித்து இன்று காலையில் நான் ரேடியோவில் கேட்டேன். அப்பா பணத்தை ஆயத்தம் பண்ணினார், நாங்கள் வாடகை பேருந்தைப் பிடித்தோம், நான் அவரைக் காணத் தான் வந்திருக்கிறேன். இப்பொழுது அவர்களோ கட்டிடத்தின் அருகில் கூட போக முடியவில்லை என்று கூறுகின்றனர்,’ என்றாள்.
நான், ‘நாம் இப்படிப்பட்ட அருமையான மருத்துவர்களைப் பெற்றிருக்கும் இன்நாட்களில்... நீ அதைப் போன்ற, அப்படிப்பட்ட காரியத்தை நம்பவில்லை, அப்படித் தானே-?’ என்று கேட்டேன்.
அவள், ‘ஆனால் பாருங்கள் ஐயா, அவர்களால் எனக்கு எந்த நல்ல காரியத்தையும் செய்ய முடியவில்லையே,’ என்றாள்.
நான், ‘அந்த மனிதனுடைய ஜெபம் எனக்காக – உனக்காக எதையாவது செய்யும் என்று நீ விசுவாசிப்பதாக கூற விரும்புகிறாயா-?’ என்று கேட்டேன்.
அவள் இவ்விதமாகக் கூறினாள். நான் அதை ஒருபோதும் மறக்கவே மாட்டேன். அவள், ‘நான் என்ன செய்வேன் என்பதை உம்மிடம் கூறுகிறேன். அந்த மனிதர் இருக்கும் இடத்தில் போகும்படி நீர் எனக்கு சற்று உதவி செய்வீரென்றால், நான் என்னுடைய அப்பாவைக் கண்டு பிடித்து விடுவேன்,’ என்றாள். எனக்கு என்னவொரு கடிந்து கொள்ளுதல்.
12. குருடாயிருந்த ஃபேனி கிறாஸ்பியை (Fanny Crosby) நான் நினைவு கூர்ந்தேன். இந்த வேறொரு மனிதன், வேறொரு குருடான மனிதன் சுகமடைந்ததைக் குறித்து அவள் கேள்விப்பட்டிருந்தாள், ஃபேனி கிறாஸ்பி இவ்வாறு எழுதினதைக் குறித்து நான் நினைவு கூர்ந்தேன்:
ஓ, மிருதுவான இரட்சகரே, 
என்னைக் கடந்து செல்லாதேயும்,
என் தாழ்மையான கூக்குரலைக் கேளும்;
கூப்பிடுகிற மற்றவர்களை நீர் சந்திக்கும் போது,
என்னைக் கடந்து செல்லாதேயும்.
நீரே என் எல்லா ஆறுதலின் ஓடை,
நீர் ஜீவனை விட எனக்கு மேலானவர்,
இவ்வுலகில் உம்மைத் 
தவிர எனக்கு யாருண்டு-?
பரலோகத்திலும் நீரேயன்றி 
வேறு யார் எனக்குண்டு-?
தேவன் ஏஞ்சலஸ் டெம்பிளில் சுகமளிக்கிற நேரத்தில், இந்த மேலறையிலும் அவரால் சுகமளிக்க முடியும். கடந்த இரவில் அந்த சக்கர நாற்காலியில் இருந்த மனிதனை சுகப்படுத்தின தேவன் அவரே, அசையக் கூட முடியாத போதிலும், புற்று நோயை சுகப்படுத்தி அந்த கட்டிலை விட்டு எழும்பப் பண்ணி, களிகூரச் செய்தவரும் அவரே. சிறிய ரிக்கியை சுகப்படுத்தினவரும் அவரே, செய்தியைக் கடலைத் தாண்டி எல்லா இடங்களுக்கும் அனுப்பி, நீரிழிவு நோயினால் மரித்துக் கொண்டு இருந்த அந்த பெண்மணியிடம் உரைத்தவரும் அவரே, இதோ இக்காலையில் அவளுடைய சகோதரி இங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கிறாள்: இவள் திரும்பிச் செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டாள். அவர் இப்பொழுதும் அதே தேவனாக இருக்கிறார்.
13. நான் அவளை நோக்கிப் பார்த்து, அவளிடம், ‘நான் - நான்... ஒருவேளை நீ காண வேண்டும் என்று நினைப்பது நானாக இருக்கலாம்,’ என்றேன். தேவன் எப்படி மிகச்சரியாக காரியங்களை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார் என்று பாருங்கள். நான் ஏன் பின்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்-? அவள் என்னுடைய கோட்டின் முன்மடிப்புகளை இவ்விதமாக இறுகப் பற்றிக் கொண்டு, ‘நீர் தான் அந்த சுகமளிப்பவரா-?’ என்று கேட்டாள்.
நான், ‘இல்லை, சகோதரியே, நான் சுகமளிப்பவனல்ல. நான் வெறுமனே உன்னுடைய சகோதரன் தான்,’ என்று கூறினேன்.
அவள், ‘நான் அந்த சுகமளிப்பவரைக் காண விரும்புகிறேன்,’ என்றாள்.
நான், ‘நீ ஏதோவொரு நாளில் அவரைக் காண்பாய் என்று நம்புகிறேன், நீ அவரைக் காண்பாய் என்று விசுவாசிக்கிறேன்,’ என்று கூறினேன்.
அவள், ‘உம்முடைய பெயரென்ன-?’ என்று கேட்டாள்.
நான், ‘சகோ.பிரன்ஹாம்’ என்றேன்.
அவள், ‘நான் காண விரும்பின நபர் நீர் தான்,’ என்று கூறினாள்.
நான், ‘இப்பொழுது, யாருக்குமே என்னைத் தெரியவில்லை. நான் உனக்காக ஜெபிப்பேன், ஆனால் அது மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது. உன்னுடைய கரத்தைக் கொடு...’ என்றேன். என்னுடைய கோட்டின் முன்மடிப்பை விட்டு அவளுடைய கரங்களை இழுத்தெடுக்க என்னால் முடியவேயில்லை. அவள் தருணத்தைத் தவற விட்டு விடக்கூடாது என்று எண்ணி, அதைப் பற்றிப் பிடித்துக் கொண்டு இருந்தாள். நான் அவளிடம், ‘நீ விசுவாசித்தால், என்னால் ஜெபிக்க முடியும்,’ என்றேன்.
அவள், ‘நீர் செய்ய வேண்டுமென்று நான் கேட்பதெல்லாம் அவ்வளவு தான்,’ என்று கூறினாள். நாங்கள் எங்கள் தலைகளைத் தாழ்த்தினோம், நாங்கள் ஜெபித்துக் கொண்டிருந்த போதே, ஒரு அலறல் சத்தத்தைக் கேட்டேன். அவள் அந்தக் கும்பலுக்குள் ஓடி, ஜனங்களை இப்படியும் அப்படியுமாக தள்ளிக் கொண்டு, தரையில் விழுந்து, ‘நான் குருடியாய் இருந்தேன், இப்பொழுதோ என்னால் காண முடிகிறது’ என்று உரத்த சத்தமிட்டாள்.
ஒரு சில வாரங்களுக்கு முன்பு, அவளிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் கிடைத்தது. ஓ, அவளுடைய கண்கள் இருபதுக்கு இருபதாக (பரிபூரண பார்வை) இருந்தது. அவள் கண் கண்ணாடிகளையோ அல்லது (வேறு) எதையும் கூட அணிய வேண்டியதாய் இருக்கவில்லை. அது இந்தக் காரியங்களைச் செய்கிற தேவனுடைய ஆச்சரியமான கிருபையாய் உள்ளது. அது நல்ல சுகத்தைக் கொண்டு இருக்கும்படியான சிலாக்கியத்தை அனுபவிக்கும்படி இயேசு கிறிஸ்து தமது சபைக்குக் கொடுத்த ஏதோ ஓன்றாக உள்ளது.
14. நான் அந்த இரவை நினைவுகூருகிறேன். நாம் முடிக்கையில், இதை நான் கூறியாக வேண்டும்: கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்காக சென்று ஜெபிக்கும் படியாக எனக்கு இந்த ஊழியத்தைக் கொடுத்த போது, நீங்கள் எல்லாரும் அறிந்து இருக்கிறபடி, நான் ஒரு ஏழ்மையான வீட்டில் வளர்க்கப்பட்டு இருந்தேன், அக்காரணத்தினால் தான் நான் படிப்பறிவில்லாதவனாய் இருக்கிறேன், என்னால் பேச முடியாது, மேலும் மற்ற காரியங்களையும் செய்ய முடியாது; ஆனால் நான் பெரியவனாய் இருக்க விரும்பவில்லை என்றும், நான் பிரபலமானவனாக இருக்க விரும்பவில்லை என்றும், நான் வெறுமனே நேர்மையாய் இருக்கவே விரும்புகிறேன் என்றும் கர்த்தரிடம் கேட்டுக் கொண்டேன்; நான் விரும்புவது எல்லாம் அவ்வளவு தான், நான் சத்தியத்தைக் கூறிக் கொண்டிருக்கிறேன் என்பதை உங்களால் அறிய முடியும், ஏனெனில் நான் அவரை பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்.
நான் ஊழியக்களத்தில் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கத் தொடங்கின போது, எனக்கு அணிய ஒரு சூட்டும் இருந்தது இல்லை. நான் என்னுடைய ஜீவியத்தில் இது வரையிலும் ஒரு போதும் காணிக்கை எடுத்ததே கிடையாது. அந்நேரத்தில், பாவியான ஒரு பையனாய் இருந்த என்னுடைய சகோதரன் (அவனுக்கு ஒரு மோட்டார் வாகன விபத்து ஏற்பட்டிருந்தது) அவர்கள் அவனுடைய ஆடைகளை முழுவதுமாக வெட்டினார்கள். அவன் அந்தப் பழைய சூட்டை எனக்கு தந்தான். அந்தக் காற்சட்டைகள் ஏறக்குறைய முழுவதுமாகக் கிழிந்திருந்தன. என்னுடைய மனைவி பத்து காசு அங்காடிக்குச் (ten cent store) சென்று, ஆடையில் வைத்து தைப்பதற்கான, இஸ்திரி பெட்டியைக் கொண்டு இஸ்திரி போடப்பட்ட துண்டு துணிகளில் சிலவற்றை வாங்கினாள், உங்களுக்குத் தெரியும். அவள் அந்த காற்சட்டைகளை ஏறக்குறைய முழுவதும் புதுப்பித்தாள், பாக்கெட்டும் கிழிந்து இருந்தது. நான் எனக்கு ஒரு ஊசியையும் நூலையும் வாங்கி, அந்த பாக்கெட்டை நல்ல விதமாக தைத்தேன், உங்களுக்குத் தெரியும், அதை பழுது பார்த்து தைத்தேன். எனக்கு ஒரு ஊசியோடு அதிக பழக்கமில்லை.
15. நாம் இங்கே இக்காலையில் கொண்டிருப்பதைப் போன்ற அப்படிப்பட்ட ஊழியக்காரர்களிடம் அவர்கள் என்னை அறிமுகம் செய்து வைத்த போது, நான் கோட்டைக் (coat) குறித்து அதிகமாக வெட்கப்பட்டதை நினைவுகூருகிறேன். கிழிந்து போய் தைத்த அந்த பகுதி வலப்பக்கத்தில் இருந்தது, மேலும் அது - நான் என்னுடைய வலது கரத்தை நீட்டி இருந்தேன். எனவே நான் கைப்பகுதியில் அந்த கிழிந்து போன பாக்கெட்டின் மேல் என் கரத்தை வைத்து பிடித்துக் கொண்டு, ஊழியக்காரர்களோடு கைகுலுக்குவதற்காக என்னுடைய இடது கையை நீட்டி, என்னுடைய இடது கையைக் கொண்டு கைகுலுக்குவதற்காக மன்னியுங்கள் என்று கூறுவேன், ஆனால் அது என்னுடைய இருதயத்துக்கு நெருக்கமாக இருந்தது. ஆனால் காரியம் என்னவெனில், நான் அந்தப் பழைய கிழிந்து போன பாக்கெட்டைக் குறித்து வெட்கப்பட்டேன்.
ஆனால் அந்த எத்தியோப்பிய வாலிப பெண் தன்னுடைய பார்வையைப் (பெற்றதை) அந்த ஜனங்கள் பார்த்த போது, அங்கே ஒரு கைத்தடியோடும் (club), வளைந்து திருகிப் போன ஒரு காலைக் கொண்டுமிருந்த ஒரு வயதான மனிதர் நின்று கொண்டிருந்தார்; அவர், ‘சகோதரன் பிரன்ஹாமே, நீர் யாரென்று எனக்குத் தெரியும். நான் இங்கே இந்த மழையில் மூன்று நாட்களாக நின்று கொண்டு இருக்கிறேன். நீர் சற்று தேவனிடம் வேண்டிக் கொள்வீரானால், தேவன் என்னுடைய காலை சுகப்படுத்துவார்,’ என்றார். அந்நேரத்தில் என்ன செய்ய முடியும்-?
நான் அவரிடம், ‘என் சகோதரனே, இயேசு மரித்து, இந்த எல்லா காரியங்களையும் கைகூடி வரச் செய்ய மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்று நீர் விசுவாசிப்பீரானால், உமது கைத்தடியை என்னிடம் கொடுத்து விடும்,’ என்றேன். அவர் அந்தக் கைத்தடியை என்னிடம் கொடுத்த போது, அவர் வெறுமனே விளையாட்டுக்காக போலியாக அதைச் செய்யவில்லை, அவர் அதை கருத்தோடு தான் செய்தார். அந்த வளைந்து போன கால் நேரானதை என்னுடைய சொந்த இரண்டு கண்களாலும் நான் கண்டேன்; அவர் மேலே குதித்து சத்தமிடத் துவங்கினார்.
ஜனங்களைத் தவிர நான்கு மனிதர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு நெருக்கினார்கள், தாய்மார்கள் தங்கள் சிறு குழந்தைகளைக் கொண்டு வந்து, வெறுமனே அந்தப் பழைய கிழிந்து போன கோட்டைத் தொடுவதற்காக, போதுமான அளவு என்னருகில் நெருங்கி வர முயன்று கொண்டு இருந்தார்கள், தேவன் அவர்களைச் சுகப்படுத்திக் கொண்டிருந்தார். அது அந்தக் கிழிந்து போன கோட்டோ அல்லது அதை அணிந்திருந்த மனிதனோ அல்ல. அது அவர்களுடைய விசுவாசத்தைக் கனப்படுத்திக் கொண்டு இருந்த, இக்காலையில் இங்கே இருக்கும் கர்த்தராகிய இயேசுவாக இருந்தது. அவர் விளங்கிக் கொள்ள முடியாத வழிகளில் நம்மை நடத்துகிறார், ஏனெனில் அவர் நம்மை நேசிக்கிறார். அது ஞானிகளின் தலைக்கு மேலும், கல்விமான்களின் தலைக்கு மேலும் போகும் அளவுக்கு அவர் அதை மிக எளிமையாக ஆக்கி வைத்திருக்கிறார், அது அவ்வாறு தான் இருக்கும் என்று அவர் கூறினபடி, அவர் கற்றுக் கொள்ளுகிறவர்களைப் போன்ற அப்படிப்பட்ட பாலகருக்கு தம்மை வெளிப்படுத்துவார்.
16. இங்கே இக்கட்டிடத்தில் அநேக ஜனங்கள் உபத்திரவப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை இப்பொழுது அறியும்படியாக போதுமான பரிசுத்த ஆவியானவரின் உணர்வை நான் பெற்று இருக்கிறேன். நாம் ஏன் அதை சரியாக இப்பொழுதே தீர்மானம் செய்து, இயேசு உங்கள் எல்லாருக்காகவும் செய்தவைகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது-? அந்த இரவில் அங்கே வெளியில் இருந்த அதே தேவன், இப்பொழுதும் இங்கே இருக்கிறார். அவர்களுக்கு இருந்த அதே தேவைகளே உங்களுக்கும் இருக்கின்றன. அவர் மனிதர்களை மதிப்பவரல்ல. வேதவாக்கியங்கள் உண்மையாய் உள்ளன. நாம் கடைசி நாட்களில், கர்த்தருடைய வருகையின் நிழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நிரூபிக்கும்படி இக்காரியங்கள் செய்யப்படுகின்றன.
சிறிது நேரத்திற்கு முன்பு ஒரு பேச்சாளர் கூறினபடி, அமெரிக்க ஜனாதிபதி இடத்திலும், அமைச்சரவையிலும், மற்றவர்களிடத்திலும் அழைப்பு விடுத்து, ‘என்ன செய்யலாம்-?’ என்ற கேள்வி கேட்கப்படுகிறது... எதுவுமே செய்ய முடியாது. அப்படியே கர்த்தரை சந்திக்க ஆயத்தப்படுங்கள். நம்முடைய கிருபையின் நாளை நாம் பாவம் செய்து கழித்து விட்டோம், ஒரேயொரு காரியம் மாத்திரமே விடப்பட்டு உள்ளது, அது கர்த்தருடைய வருகையே. சம்பவிக்கிறதாக நீங்கள் காண்கிற இந்த அடையாளங்களும், அற்புதங்களும்... ... 
...